உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி இராஜினாமா…



ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் இன்று(06) தனது பதவியை திடீரென்று இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேம்ஸ் சதர்லெண்ட் தெரிவிக்கையில்;

“… 20 ஆண்டு காலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். பதவி விலகல் முடிவில் நான் மிகவும் சௌகரியமாக இருக்கிறேன். இது எனக்கு சரியான நேரம்.. “ என தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அப்பதவியில் சதர்லெண்ட் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையை சதர்லெண்ட் விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விழுந்த விமானத்தை சுளியோடிகள் தேடுகின்றனர்

wpengine

ஊவா மாகாண சபையின் பாதுகாப்பிற்காக கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்..

wpengine

இன்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரஃப் இன் 15ஆவது நினைவு தினம்

wpengine