உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மே 18-ம் திகதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 18-ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

“அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில் நாட்டின் வலுவான பொருளாதாரத்தை இந்த தேர்தல் தீர்மானிக்கும். உலகின் மிகச்சிறந்த நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், உங்களின் வருங்கால பாதுகாப்பு வலுவான பொருளாதாரத்தையே சார்ந்துள்ளது” என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்களிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

பிலிப்பைன்ஸில் இன்று 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை காவலராக தமிழர் நியமனம்

wpengine

நடை மேம்பாலத்தில் அதிவேக ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…

wpengine