விளையாட்டு

ஆஸி வீரர்களின் தடையினை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை…



பந்தினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஒழுங்கமைப்பினால் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணல் காகிதத்தைக் கொண்டு, பந்தினை சேதப்படுத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலத்துக்கும், கமரன் பென்க்ராஃப்ட்டுக்கு 9 மாத காலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த இந்த தீர்மானம், ஏற்புடையதல்ல என, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஒழுங்கமைப்பின் தலைவர் க்ரெக் டயர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தடை தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கட் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

#####

Related posts

2016 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணியினை வெளியிட்டது ICC (பட்டியல்)

wpengine

முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் மோதுகின்றன…

wpengine

இம்ரான் தஹீரின் பந்துவீச்சில் மண்டியிட்டது மேற்கிந்திய அணிகள்

wpengine