விளையாட்டு

ஆஸி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் கைவிடப்பட்டது…



சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று(05) இடம்பெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் குறித்த இந்தப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.

இதையடுத்து, நடுவர்களின் அறிவிப்புக்கமைய போட்டி கைவிடப்பட்டதுடன், இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டன.

இதற்கு முன்னரும் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

PSG அணியானது 25 ஆண்டுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி

wpengine

ஒழுக்காற்று விதிகளை மீறியதற்காக சுரங்க லக்மாலுக்கு அபராதம்.

wpengine

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்புக்கு பின்னால் இந்தியா உள்ளதா?

wpengine