உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸி, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர், டிச.15


அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர், டிசெம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநராக இருந்த ஆர்தர், 2013ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு முன்னர், அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில், தனது முன்னாள் அணியை அவர் எதிர்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க், “அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக அவர் இருந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ளூர்ப் போட்டிகளில் அவர் தனது நேரத்தைச் செலவிட்டுள்ளார்.

பிறிஸ்பேண் மைதானம் தொடர்பிலும் எங்கள் வீரர்கள் தொடர்பிலும், அவருக்கு அறிவு இருக்கலாம். ஆனால், அவர் பணியாற்றிய பின்னர், அவுஸ்திரேலிய அணி, ஏராளமாக மாற்றமடைந்துள்ளது. நாங்கள் இப்போது, மிகவும் நெருக்கமான வீரர்களாக உள்ளோம்” என்றார்.

Related posts

இலங்கையின் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் கவலை …

wpengine

உமா ஓயா மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள்…

wpengine

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) கலந்துரையாடல்…

wpengine