Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆளில்லா விமானத்தால் விமானப்படைக்கு பெரும் நஷ்டம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் தியவன்னா ஓயாவில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஆளில்லா விமானம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தியவன்னாவையில் விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது அந்த விமானம் கடந்த மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஆரம்ப விழாவின் போது உளவு பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

அப்போது திடீரென தியவன்னா ஓயாவில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் விமானத்தின் பேட்டரி வலுவிழந்ததால் விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ​​விமானத்தை பத்திரமாக தரையிறக்க விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் அது தோல்வியில் முடிந்ததாக தெரியவந்துள்ளது.

Related posts

இலங்கை அணியை உற்சாகப்படுத்த பெண்களை களமிறக்குகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்..?

wpengine

சுற்றிவளைப்பில் பாணந்துறையில் இருவர் கைது

wpengine

ஐந்து மாகாணங்களுக்கு இரவு நேரங்களில் கடும் மழை

wpengine