உள்நாட்டு செய்திகள்

ஆற்றில் விழுந்த கார் – இருவர் உயிரிழப்பு..



லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று(18) கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கம்பஹா பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பியூமிசாந்தி பிரசாதி பெரேரா எனும் யுவதியும், உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சூரிய சக்தியால் இயங்கும் முச்சக்கரவண்டி அறிமுகம்

wpengine

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன்(28) நிறைவு…

wpengine

முரளிக்கு ICC இனால் அதியுயர் கௌரவ விருது

wpengine