உள்நாட்டு செய்திகள்

ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்ற வளாகத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று(28) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று (28) முற்பகல் 10.45 மணி முதல் 11.30 மணிவரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் வைக்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(31) மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாய்ந்தமருதில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டன

wpengine

தேசிய நத்தார் விழா இன்று(21) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில்…

wpengine

இன்று முதல் புதிய ரயில், அலுவலக மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகள் சேவை ஆரம்பம்!

News Editor