உலக செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேர் கைது



(FASTNEWS|COLOMBO ) – ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரி ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரஷ்யாவில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை நகர சபை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,400 பேரை பொலிஸ் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,400 பேரை பொலிஸ் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும், செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 45 இடங்களைக் கொண்ட மாஸ்கோ நகர சபைக்கான தேர்தலில் பங்கேற்க முடியாத வகையில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பல்பொருள் அங்காடியில் தீ – 3500 பேர் வெளியேற்றம்

wpengine

தமிழக உள்ளாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு

wpengine

ஹோண்டுராசை தாக்கிய புயல் – 26 பேர் பலி

wpengine