உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டதாரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.. – ஹம்பாந்தோட்டையில் விசுரிய நீர்ப் பிரயோகத்தில் இரசாயன திரவம் கலப்பு..



அரச சொத்துக்களை விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் தரப்பினால் பிரயோகிக்கப்பட்டது நீர் மற்றும் கண்ணீர்ப்புகை அல்ல என தென் மாகாண சபையின் பிரதித் தலைவர் சம்பத் அத்துகோரல குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது நீருடன் கலந்து இரசாயன திரவம் ஒன்றினை கலந்து பிரயோகித்ததாக சம்பத் அத்துகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று(10) தென்மாகாண சபையில், தென்மாகாண சபையின் தலைவர் சோமவங்ச கோதாகொட தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“ஆர்ப்பாட்டதாரர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட நீர் மற்றும் கண்ணீர்ப் புகைகளில் இரசாயன திரவத்தினை கலந்தே பிரயோகித்தனர். அதன்போது அங்கிருந்தோரில் அநேகமானோருக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. இருமல்.. வாந்தி.. ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி தீவிரவாதிகளை கையாளுவது போன்று தான் ஆர்ப்பாட்டதாரிகளையும் கையாண்டது. குறித்த நீர் மற்றும் கண்ணீர்ப்புகைகளில் கலக்கப்பட்டிருந்த இரசாயன திரவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்..” என தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

wpengine

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

wpengine

மட்டக்குளிய, துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு.

wpengine