உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டங்களுக்கு இரு இடங்களை ஒதுக்க அரசு நடவடிக்கை…



எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் இரண்டு, இடங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு, கோட்டை மற்றும் புறக்கோட்டை, நாடாளுமன்றத்துக்கு அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால்; பொதுமக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலைமையை இல்லாமற் செய்வதற்கே, அரசாங்கம் மேற்கண்டவாறு தீர்மானத்தை எடுக்க உள்ளதாக அறிய முடிகின்றது. அதனடிப்படையில், கொழும்பு மற்றும் நாடாளுமன்றத்துக்கு அண்மையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இரண்டு இடங்களை, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர், சகல எதிர்ப்பு நடவடிக்கைகளும் இவ்விரு இடங்களில் மட்டுமே வரையறை படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

களனி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதம நிர்வாக கட்டடத்தை சுற்றி வளைப்பு

wpengine

பிரசன்ன ரணவீரவை கைது செய்ய நடவடிக்கை…

wpengine

தேர்தல் ஆணையகத்தில் ரிஷாட் முறைப்பாடு

wpengine