Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள யோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 (கொரோனா) தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால் விமான நிலையத்திதை திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எனினும் விமான நிலையத்தை திறப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாராளுமன்றில் அமைதியின்மை.. – சபை ஒத்திவைப்பு.

wpengine

தென் மாகாணத்திலும் அரச மருத்துவ அதிகாரிகள் சேவை புறக்கணிப்பில்….

wpengine

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

wpengine