உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆயுதமேந்திய படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சி : சஜித் விசனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

,இன்று 13 ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டு நிலைவரம் தொடர்பில் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது. இந்த தருணத்தில் இருவரை மாத்திரம் பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டும்.

முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டவாறு ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் ஊடாக ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அதிகார வெறி பிடித்த ஐனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கும்பலின் ஏமாற்று நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இனி மேலும் இந்த ஏமாற்று நடவடிக்கைக்கு இடமில்லை.

ஜனநாயகத்திற்காக போராடும் மக்களை அடக்குமுறைக்குட்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். பாதுகாப்பு படையினர் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை காப்பாற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களின் அமைதியான வாழ்வுடன் விளையாடுவதை அரசாங்கம் கைவிட வேண்டும். இத்தருணத்தில் மக்கள் அமைதியாகவும் ஜனநாயகத்தை மதித்தும் செயற்பட வேண்டும் என்றார்.

Related posts

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்..

wpengine

மாத்தறை – பெலியத்த வரையிலான புகையிரத சேவை…

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிரதமர் தலைமையில்…

wpengine