உள்நாட்டு செய்திகள்

ஆமி சமந்தவை விசாரணை செய்ய அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷ் உடன் தொடர்பை பேணி வந்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஆமி சமந்தவை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மினுவங்கொடை நீதவான் நீதின்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே, அவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிசாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சமீபத்தில் திவுலபிடிய, படல்கம பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் லசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது.. (VIDEO)

wpengine

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு…

wpengine

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு

wpengine