உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி



(FASTNEWS|COLOMBO) 2019 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று சவுதம்டனில் இந்திய மற்றும்  ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில்  இந்திய அணி 11 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் விராட் கோலி அதிகூடுதலாக 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அதையடுத்து, 225 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.5 ஓவர்களில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

 

 

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கம்

wpengine

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி

wpengine

உலகக்கிண்ணம் குறித்து மனந்திறந்தார் சமிந்த வாஸ்

wpengine