உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு…


ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் புறநகர் பகுதி வழியாக சென்ற இராணுவ வாகனங்கள் மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Related posts

காபூல் குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ISI துணை என ஆப்கான் குற்றச்சாட்டு..

wpengine

பப்புவா நியூகினியா தீவில் வெடித்து சிதறும் எரிமலை – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…

wpengine

அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

wpengine