உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு..



ஆப்னானிஸ்தானில் காபூலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் காபுலில் உள்ள கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பட்டு அமைச்சகத்தின் நுழைவு வாயில் அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். ஒரு நாளில் மட்டும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுள்ள இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

அந்நாட்டின், ஜலாலாபாத் பகுதியில் உள்ள கல்வித்துறை கட்டிடத்தின் அருகே நேற்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

wpengine

ஹமாஸ் குறித்து ஐநா தீர்மானம் எதனையும் குறிப்பிடவில்லை – வாக்கெடுப்பை தவிர்த்தது அவுஸ்திரேலியா..!

wpengine

வலுக்கும் டெல்டா வைரஸ்

wpengine