உள்நாட்டு செய்திகள்

ஆபாச வசை: எம்.பியின் மகன், மருமகள் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தென் அதிவேக நெடுஞ்சாலையின் பெந்திகம மாற்றத்தில் வைத்து பொலிஸ் அதிகாரியொருவரை ஆபாச வார்த்தைகளால் வசை பாடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகனும் மருமகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரக்கெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் போது, பாதுகாப்பற்ற முறையில் ஏற்றப்பட்ட குளிர்சாதன பெட்டியுடன் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய வேண்டாம் என்று பொலிஸ் அதிகாரி, எம்.பியின் மகனை அறிவுறுத்தினார்.

எம்.பியின் மகன் ரவிந்து வெதஆராச்சியும் அவருடைய மனைவியும் பொலிஸ் அதிகாரியை ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

UPDATE – வெள்ளவத்தையில் ஏழு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததின் மீட்புப் பணிகள் STF ஒத்துழைப்புடன்..

wpengine

முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் காலமானார்…

wpengine

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine