ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஆபரேசன் மூலம் 295 கிலோ உடல் எடையை குறைத்த அற்புத ஜீவன்



இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பால்மேசன் (54). இவர் 444.5 கிலோ எடை இருந்தார். அதன் மூலம் உலகின் அதிக எடையுள்ள குண்டு மனிதர் என்ற பெருமை பெற்றார். உடல் எடை கடுமையாக அதிகரித்ததால் அவரால் எழுந்து நடமாட முடியவில்லை. படுத்த படுக்கையாக கிடந்தார்.

எனவே, அவர் தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். அதற்கான அறுவை சிகிச்சை அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் உள்ள லெனாக்ஸ் ஹில் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் நடந்தது.

டாக்டர் ஜெனீபர் கேப்லா தலைமையிலான டாக்டர்கள் குழு அவருக்கு 9½ மணி நேரம் ஆபரேசன் செய்தனர். 4 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும், சாதாரண அறுவை சிகிச்சைகளும் நடத்தப்பட்டன.

தற்போது அவர் 295 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். ஆபரேசனின் போது தோல் மட்டும் 23 கிலோ வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய சவால் என ஆபரேசன் செய்த டாக்டர் ஜெனீபர் கேப்லா தெரிவித்துள்ளார்.

Related posts

சல்மான் கானின் வாகனத்தில் இருந்த பெண் யார்..?

wpengine

இந்திய தேசிய அணிக்கு இலங்கையில் இருந்து பயிற்சியாளர்..

wpengine

பாராளுமன்ற ஆசனங்கள் தொடர்பிலான புள்ளி விபரம்…

wpengine