உள்நாட்டு செய்திகள்

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 36 மணிநேரத்தில் வடக்கு கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 590 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புங்குடுதீவு கடற் பகுதியில் சுமார் 300 கிலோகிராம் கேரள கஞ்சாவும், மாதகல் கடற் பகுதியில் 191 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், மைலிட்டி கடற் பகுதியில் 99 கிலோகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளன

Related posts

கொவிட் 19 : நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

wpengine

வாக்காளர் பெயர் பட்டியலுடன் எவ்வித விண்ணப்பமும் வழங்கப்படவில்லை

wpengine

அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

wpengine