உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை வீரர் திலின சமரவீரவை துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கின்றது



இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்த தொடரில் சிறப்பாக விளையாட இலங்கை வீரர் திலின சமரவீரவை துடுப்பாட்ட ஆலோசகராக நியமித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை சென்று 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலேயில் யூலை 26ம் திகதி தொடங்குகிறது.

இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இலங்கை வீரர் சமரவீர மூலம் அவுஸ்திரேலியா வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

இதனால் இந்த தொடருக்கு இலங்கை வீரர் சமரவீரவை அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமித்துள்ளது.

இந்த தொடருக்காக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டை வேகப்பந்து வீச்சாளர்களின் வழிகாட்டியாகவும் நியமித்துள்ளது.

அவுஸ்திரேலியா அணி ஏற்கனவே இந்தியாவில் விளையாடும் போது இந்திய வீரர் ஸ்ரீராமையும், கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடும் போது முத்தையா முரளிதரனையும் ஆலோசகராக நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த 167 பெயர்கள் நம்பிக்கையின் சாட்சிகள் பட்டியலில் இணைப்பு

Azeem Kilabdeen

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மைதானத்திலிருந்து டில்ஷானின் பிரியாவிடையின் போது நிகழ்த்திய இறுதி உரை..

wpengine