உள்நாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய நடைமுறை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கு அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல் 2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு அவுஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை General அல்லது Graduate பிரிவுகளின் கீழ் state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு அவுஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கு எப்போது விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள https://migration.wa.gov.au என்ற இணைப்பிற்கு செல்லவும்.

Related posts

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்.. [PHOTOS]

wpengine

இலங்கை – சீஷெல்ஸ் இடையே இரு உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine

நாட்டின் பல மாகாணங்களில் சீரான காலநிலை…

wpengine