உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட்கார்ட் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு



காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அவன்ட்கார்ட் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று(17) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இந்தக் கப்பலை விடுவிக்குமாறு காலி நீதிமன்றம் முன்னரும் உத்தரவிட்டிருந்ததுடன் அந்த உத்தரவு செயற்படுத்தப்படவில்லை.

இதனையடுத்து கப்பல் நிறுவனமான சிலோன் சிப்பிங் நிறுவனம் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து, கப்பலை விடுவிக்குமாறு கோரியிருந்தது.

இதனடிப்படையில் துறைமுகப் பொறுப்பதிகாரி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்ததுடன், நீதிமன்றம் அவருக்கு கடுமையாக எச்சரித்து, கப்பலை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

ஆயுதங்களுடன் கூடிய இந்த கப்பல் பழுதடைந்த நிலையில் இருப்பதால், அந்த ஆயுதங்களை வேறு கப்பலுக்கு மாற்றுவதற்கு அனுமதி கோரப்பட்ட போதிலும் இதுவரை அந்த ஆயுதங்கள் வேறு கப்பலுக்கு மாற்றப்படவில்லை.

 

Related posts

சிங்கராசா தீர்ப்புக்கு அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

wpengine

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது…

wpengine

காலி – கொழும்பு பிரதான வீதி ரத்கம பிரதேசத்தில் போக்குவரத்து நெரிசல்…

wpengine