உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட்காட் தொடர்பிலான விசாரணைக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விஜயம்



அவன்ட்காட் ஆயுத கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்று இன்று(28) கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஐவர் அடங்கிய குழுவொன்று இன்று காலை கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை விசாரணை நடவடிக்கைகளுக்காக கப்பலுக்குள் செல்லும் இந்த அதிகாரிகள் குழு நாளை மாலை வரை கப்பலில் தங்கியிருந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த காலப்பகுதியினுள் அந்தி அதிகாரிகளினால் கப்பலில் உள்ள ஆயுதங்கள் தொடர்பில் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் எனவும் லெசில் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

MV X-Press Pearl : வழக்கு ஒத்திவைப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி

wpengine

இலங்கைக்கு வெற்றி இலக்காக 279 ஓட்டங்கள் நிர்ணயம்…

wpengine