உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்கார்ட் நிறுவனம் 9100 மில்லியன் திருப்பி செலுத்த சம்மதம்



அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக நேற்று(8) இடம்பெற்ற விசாரணைகளின் போது, ரூபா 9100 மில்லியன் திருப்பி செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பணத் தொகையினை எதிர்வரும் 10 மாதங்களுக்குள் இலங்கை ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு செலுத்த ஒத்துக்கொண்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போதே இலங்கை ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன கணக்காளர் பிரசாத் இந்திக இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2009 ஆண்டுக்கு பிறகு இந்நிறுவனத்தினால் அதிகரித்த இலாபம் ஈட்ட முடியாமல் போனதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

 

(riz)

Related posts

பாடசாலைகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து 500m இற்குள் சிகரெட்டு விற்பனைக்கு தடை..

wpengine

நெரிசல்மிக்க பகுதிகளுக்கு தனியான பஸ் கட்டணம் – கெமுனு

wpengine

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல்; மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்தார் வை. அஹமட்லெவ்வை

Azeem Kilabdeen