உள்நாட்டு செய்திகள்

அவசர காலநிலை சட்டத்தினை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் 18ம் திகதி வெளியிடப்படும்..



நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 06ம் திகதி பிரகடனப்படுத்தி இருந்த அவசர காலநிலை சட்டத்தினை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலினை இரத்து செய்ய ஜனாதிபதி நாட்டில் இல்லாததால் குறித்த அவசர காலநிலை எதிர்வரும் 18ம் திகதி வரை தொடரும் என ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவசர காலநிலை சட்டத்தினை நீக்குவதாயின் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட வேண்டும் எனவும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவசர காலநிலை பிரகடனத்தினை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று(14) வெளியிடப்பட இருந்த நிலையில் ஜனாதிபதி ஜப்பான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளமையாலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இலங்கை நேரப்படி இந்நாட்டில் வைத்து வர்த்தமானி அறிவித்தலில் இந்நாட்டில் இருந்து கையொப்பம் இட வேண்டியுள்ளதாலும் குறித்த வர்த்தமானி அறிவித்தலினை இரத்து செய்யும் போது ஜனாதிபதி இந்நாட்டில் இருக்க வேண்டும் எனவும் ஒஸ்டின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி இலங்கைக்கு வந்ததன் பிற்பாடு 18ம் திகதி இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது என மேலும் தெரிவித்திருந்தார்.

 

-Rishma

Related posts

மக்கள் முறைப்பாடுகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

wpengine

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

wpengine

300ஐ தாண்டிய தடுப்பூசி நிலையங்கள்

wpengine