உள்நாட்டு செய்திகள்

அளுத்கம கலவரம் – நாளை இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை…


2014 ஆம் ஆண்டு அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடுகள் நாளை(26) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வு நாளை(26) பிற்பகல் 3.00 மணிக்கு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையில் அளுத்கம தர்கா நகரிலுள்ள ஸாஹிரா கல்லுரியில் நடைபெறவுள்ளது.

இதன்போது 122 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு 188 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.

சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் மற்றுமொரு உறுதிமொழியின் அடிப்படையில் இந்த இழப்பீடு வழங்கப்படுவதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1371 ஆக அதிகரிப்பு

wpengine

அநுராதபுரத்தில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை

wpengine

வில்பத்து சரணாலயத்தைச் சூழவுள்ள, வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பு…

wpengine