உள்நாட்டு செய்திகள்

அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடை செய்யும் யோசனை ஏகமனதாக நிறைவேற்றம்…



(FASTNEWS | COLOMBO) – அரச அறிவியல் பாடத்தின் ஊடாக, மலையக தமிழ் மாணவர்களுக்கு இஸ்லாம் மற்றும் அரபி மொழியை கற்பித்த அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடை செய்யும் யோசனை ஊவா மாகாண சபையில் இன்று(16) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானைத் தளமாக கொண்டு இயங்கும் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைகழகம், ஊவா மாகாணத்தின் 04 பாடசாலைகளை கேந்திரமாக கொண்டு வெளிவாரி பட்டப்படிப்பு பாடநெறியை முன்னெடுத்து வந்தது.

இதில் 400க்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் கற்கின்றனர்.

இதற்கு ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் ஆதரவை தெரிவித்த நிலையில், பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபை முதல்வர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related posts

டெங்கு நோய் பரவலை தடுக்க குழு நியமனம்

wpengine

பார்ட்டியில் வெடித்த துப்பாக்கி!

News Editor

இலங்கைக்கு 1 மில்லியன் ‘சைனோபாம்’ தடுப்பூசிகள்

wpengine