Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அலி சப்ரி ரஹீம் 214 ஏக்கர் அரச காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றச்சாட்டு..!

புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்துக்குச்  சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக அனுபவித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே  இது தெரிய வந்துள்ளது.

மேலும், அந்தக் காணி  தனியார் நிறுவனம் ஒன்று  உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், சுமார் 14 வருடங்களாக இந்தக் காணியிலிருந்து அரசாங்கத்துக்கு  வரி செலுத்தப்படாமையால் சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினருக்கு  அறிவிக்கப்படும் என புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சிந்தக மாயதுன்ன தெரிவித்தார்.

Related posts

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான வகுப்புக்களுக்கு தடை.

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது

wpengine

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை கவனிக்காது இருப்பது தேர்தலினை பிற்போடுவதற்காகவா..?

wpengine