உள்நாட்டு செய்திகள்

அலவ்வ மண்சரிவில் தாதி பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) – அலவ்வ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாரம்மல, வென்னொருவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மண்மேட்டில் மூவர் சிக்கியுள்ளதுடன் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயும் மகனும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய மகள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக கடமையாற்றும் 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாரளுமன்ற அமர்வு குறித்த முடிவு செவ்வாயன்று

wpengine

கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

wpengine

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்

wpengine