Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் சென்ற பல எம்.பி க்கள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயத்தின் போது பல முக்கிய நிகழ்வுகளில் இலங்கை நாடாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த எம்.பி கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், அவர்களில் பலர் ஜனாதிபதியின் முக்கிய சந்திப்புகளில் கலந்துகொண்ட  புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உத்தியோகபூர்வமாக அறிவிப்பில்லை

அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதி விக்ரமசிங்க பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்த போது காணப்பட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ருவான் விஜேவர்தன, ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வொன்றின் புகைப்படத்தில் உள்ளார்.

அதேபோல இருப்பதுடன், பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் பிரேம்நாத் தொலவத்த இவர்களுடன் தற்போது அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் , எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

Related posts

யாழில் 05 தேர்தல் வன்முறைகள் பதிவு…

wpengine

அரச ஊழியர்களுக்கு இரண்டு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்

wpengine

சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் அனுப்பப்படும்..!

wpengine