உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் அரசு கருத்து…

(FASTNEWS | COLOMBO)- முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாடு கடத்த தேவையான ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகளை இலங்கை அரசு முன்வைத்தால் மஹேந்திரனை நாடு கடத்த முடியும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட பொதுநலவாய நாடுகளுக்கு தேவையான குற்றவாளிகளை நாடுகடத்த உரிய முறையில் அரசு சட்டத்துடன் பிணைந்துள்ளதாகவும் சிங்கப்பூர் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரை சிங்கப்பூர் மறைத்து வைத்திருப்பது தொடர்பில் சிங்கப்பூர் உரிய பதிலை வழங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், தமது அரசு குறித்த குற்றச்சாட்டினை மறுப்பதாக தெரிவித்திருந்தார்.

Related posts

பதியதலாவ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது

wpengine

ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல்

wpengine

தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine