உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அர்ஜுன் நிதி அமைச்சின் ஆலோசகர் – ஊழல் தடுப்பு முன்னணி அம்பலப்படுத்தியது…



மத்திய வங்கயின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், தற்போது நிதி அமைச்சின் ஆலோசகராக பணியாற்றி வருகின்றார் என ஊழல் தடுப்பு முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

நிதி அமைச்சின் சந்திப்புக்களில் மத்திய வங்கயின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பங்குப்பற்றுவதை தடுக்க கோரி ஊழல் தடுப்பு முன்னணி, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

மேலும், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள புதிய ஆணைக்குழு ஒன்று நியமித்தமையை தாம் வரவேற்பதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் எவ்வாறு நிதி அமைச்சின் ஆலோசகராக பணியாற்ற முடியும் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அர்ஜுன் மகேந்திரன் தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட பலருடன் நிதி அமைச்சின் கூட்டங்களில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கலந்துக் கொள்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஊழல் தடுப்பு முன்னணி, ஜனாதிபதிக்கு இன்று(23) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

Related posts

‘சைட்டம்’ அரசினால் தீர்மானம் எட்டப்படவில்லை – GMOA..

wpengine

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 500 க்கும் மேற்பட்டோர் கைது…

wpengine

காதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு 

wpengine