உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அரோன் பின்ச், சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய உலக சாதனை…


அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் அரோன் பின்ச், சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

76 பந்துகளுக்கு 172 ஓட்டங்களை பெற்றுள்ள அவர் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஹராரே நகரில் இடம்பெறுகின்ற போட்டியிலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 156 ஓட்டங்களை பெற்று அரோன் பின்ச் சாதனை படைத்திருந்த நிலையில், இன்று அவரது சாதனையையே முறியடித்து மீண்டும் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

wpengine

கடுவலை – பியகம வரையிலான வீதிக்கு பூட்டு…

wpengine

கோட்டாவின் வருகையை உறுதிப்படுத்தியது தாய்லாந்து!

News Editor