உள்நாட்டு செய்திகள்

அரநாயக்க மண்சரிவு – 35 சடலங்கள் மீட்புடன் தேடுதல் பணிகள் நிறைவு.



அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவம் மேலும் அறிவித்துள்ளது.

இவ்வனர்த்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் சுமார் 100 பேர் வரை இது வரையிலும் மீட்கப்படவில்லை என இன்னும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் அடிக்கட ஏற்படும் மண்சரிவு காரணமாக தேடுதல் நடவடிக்கை தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடந்த இரு வாரங்களாக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது 35 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களில் 11 சடலங்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மேலும் 25 மாணவர்கள் வரை இந்த அனர்தத்தில் காணமல் போயிருக்கலாம் என நாம் யூகிப்பதாகவும் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

4 வது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

wpengine

40000 ரூபாவிற்கு குறைந்த சம்பளமெனின் தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா கொடுப்பனவு

wpengine

கடந்த சில தினங்களாக நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

wpengine