உள்நாட்டு செய்திகள்

அரச வங்கிகளும் ஆர்ப்பாட்டக் களத்தில் குதிப்பு


பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கிகளுக்கு அநீதிகள் ஏற்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியின் சேவையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்தக் குறித்த  ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் சுமார் ஒரு மணித்தியலாம் ஹட்டன் நகரில் மக்கள் வங்கிக்கு முன்பாக நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டத்தில் அரச வங்கி சேவையாளர்களுக்கு ஊழியர் சேமநல நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வு நிதியம் என தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வரவு செலவு திட்டத்தில் சேவையாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரச வங்கி சேவையாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது…

wpengine

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

wpengine

மேதினத்திற்கு 5,532 பஸ்களில் 2,21,000 பேர் கொழும்பு வரவுள்ளதாக NPP தெரிவிப்பு

Azeem Kilabdeen