உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தத்திற்கு தயார்…



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கவலை வெளியிட்டுள்ளது.

குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இது குறித்து தெரிவிக்கையில்;

“.. எதிர்வரும் 30 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். பல சந்தர்ப்பங்களில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியிருந்த போதிலும் அரசாங்கம் அதற்கு உரிய பதிலை இதுவரை வழங்கவில்லை.

இதன் காரணமாகவே குறித்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்..” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

#rishma

Related posts

20 ஆவது திருத்தச் சட்டம் : அரச அச்சுத் திணைக்களத்திற்கு

wpengine

எரிபொருள் மானியம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

News Editor

லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடம்பர வாகனங்கள் சிக்கியது

wpengine