Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரச நிறுவனங்களது நீர் கட்டண நிலுவை 70 கோடி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் குடிநீருக்காக எழுபது கோடி ரூபாய்க்கு மேல் நீர்வளம் மற்றும் வடிகால் சபைக்கு செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து நிலுவைத் தொகையை செலுத்தாத அனைத்து அரசு நிறுவனங்களின் கட்டணங்களுக்கும் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் (அபராதம்) வசூலிக்க குறித்த சபை தீர்மானித்துள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கட்டண பட்டியல்களை செலுத்தப்படாத பொது நிறுவனங்களில் பெரும்பாலானவை பொலிஸ், இராணுவ முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகும்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த கூடுதல் கட்டணம் அறவிடப்படுவது குறித்து அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக நீர்வள மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

பொதுவாக, தண்ணீர் கட்டணம் 90 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், தண்ணீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால், 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், பொது நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் குடிநீர் நுகர்வோருக்கும் பொதுவாக தள்ளுபடி கிடைக்கும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சங்கைக்குரிய கலகொட அத்தே தேரருக்காக அமைச்சர் காமினி முன்வருகிறார்..

wpengine

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுதலை…

wpengine

புதிய பிரதமரின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு!

wpengine