உள்நாட்டு செய்திகள்

அரச தாதியர் சங்கம் நாளை முதல் பணி பகிஷ்கரிப்பில்…



சம்பள முரண்பாடுகளை அடிப்படையாக கொண்டு நாளை(26) அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராகி வருவதாகவும், சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தையை அடுத்து இன்று(26) தீர்மானம் அறிவிக்கப்படும் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(25) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அரச தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2006ம் ஆண்டுக்கான அரச சேவை சம்பள திருத்த சட்டத்தில் பல்வேறு தரப்பின் கோரிக்கையின் பிரகாரம் திருத்தம் செய்துள்ளமையினால் தாதியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாலேயே வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். குறித்த இந்த பேச்சுவார்த்தை சாதகமாக அமையாவிடின் உடனடியாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

சீனாவிடமிருந்து தொடர்ந்தும் சுகாதார உதவிகள்

wpengine

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

wpengine

அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் – டொனால்ட் ட்ரம்ப்

wpengine