உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச ஊழியர்களுக்கான விடுமுறை! அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

என்றபோதும் இதில் நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தடுப்பூசிகளை தெரிவு செய்யாதீர்கள்

wpengine

ஐ.தே.கட்சியின் வேட்புமனுவிலுள்ள இராணுவ வேட்பாளர்களை விலகக்கோரிக்கை

wpengine

ஹகீமிற்கும் வெள்ளியன்று அழைப்பு

wpengine