உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களில் 20% ஆனோரை வேலைக்கு அழைக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானோரை வேலைக்கு அழைக்கவும் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களில் 50 வீத ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

தனியார் துறையினர் ஆரோக்கியமான விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் பாவனையாளர்கள் நலன்நோம்புகை அமைச்சின் கீழ் அதிக தேசிய வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டங்கள் எவ்வாறானதாக அமைந்துள்ளது என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை எதிர்க்க ஐ.ம.சக்தி தீர்மானம்..!

wpengine

உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்புக் கோரும் தேசபந்து தென்னகோன்!

Azeem Kilabdeen

முச்சக்கரவண்டி கட்டணம் நாளை(01) முதல் குறைப்பு…

wpengine