உள்நாட்டு செய்திகள்

அரச அதிகாரிகளுக்கு தேர்தல் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுப்பு



எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்து தெளிவூட்டும் நடவடிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.

அதற்கமைய வடமேல் மாகாணத்திலுள்ள அரச அதிகாரிகளை தெளிவூட்டும் நடவடிக்கை இன்று (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து தெளிவூட்டுல் நடவடிக்கையை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பாரிய வகிப்பங்கு காணப்படுவதால் அதன் பெறுமதியை அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த தெளிவூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சி​ஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடமையை தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தெளிவூட்டப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

Related posts

நாட்டின் சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

Azeem Kilabdeen

காலி ‘தெவட’ கடலோர சட்டவிரோத கட்டடங்களை அகற்ற இன்று(15) நடவடிக்கை…

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கற்றுக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை…

wpengine