உள்நாட்டு செய்திகள்

அரச அச்சக ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் நீடிப்பு…


அரசாங்க ஆதரவாளர்கள் சிலர் மீது அரசியல் பழிவாங்கல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதற்கான நஷ்டஈட்டை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, அரச அச்சக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக, படிவங்கள் மற்றும் வர்த்தமானி ஆகியவற்றை அச்சிடும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அரச அச்சக ஊழியர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சரத் லால் தெரிவித்துள்ளார்.

எனினும், தொழிற்சங்க நடவடிக்கையில் சில ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போதிலும், அச்சக பணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அரச அச்சகர் கங்கானி கல்பனி தெரிவித்துள்ளார்.

Related posts

வேன் குடைசாய்ந்து விபத்து – 3 பேர் மருத்துவமனையில்

wpengine

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு

wpengine

ஹட்டன் விபத்தில் இளைஞன் பரிதாபகரமாக பலி

wpengine