உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச அச்சகர் காமினி பொன்சேகா ஓய்வு பெற்றது அரசியல் அழுத்தத்தினால் – அரச அச்சக தொழிற்சங்க ஒன்றியம்



அரச அச்சகர் காமினி பொன்சேகா ஓய்வு பெற முடிவெடுத்தமை அரசியல் அழுத்தங்களினாலேயே என அரச அச்சக தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும், உரிய பதில் இல்லை என, குறித்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சரத் லால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் பதில் அச்சகராக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரை நியமித்துள்ளதாகவும், அது சட்ட ரீதியானது அல்ல எனவும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நேற்று அரச அச்சு திணைக்களத்தின் ஊழியர்கள் குறித்த நியமனத்திற்கு பலத்த எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகராக கடமையாற்றிய காமினி பொன்சேகா ஓய்வு பெற எடுத்த முடிவு பற்றி அவரிடம் நாம் வினவிய போது, பதிலளித்த அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்தாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வயோதிப மத குருமார்களுக்கு காப்புறுதி திட்டம்..

wpengine

வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

wpengine

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஜே.வி.பி’யும் கைகோர்க்கிறது

wpengine