ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரசியல் பழிவாங்கல்களில் முகநூல் கணக்குகள் சிக்கும் அபாயம் – அவசர எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தமது முகநூல் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் பகிரும் பயனாளர்களின் கணக்குகள் அடையாளம் தெரியாத நபர்களின் கைகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அடையாளம் தெரியாத தரப்பினரால் போலியாக தயாரிக்கப்பட்ட சமூக வலைத்தளம் ஊடாக, பயனாளர்களை நுழைய வைத்து அதில் தங்கள் பெயர் மட்டும் கடவுச்சீட்டை பதிவிடுமாறு கோருகின்றனர். அதன் ஊடாக அந்த தரவுகளை திருடிக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ யசிரு குருவிட்டகே மெத்திவ் தெரிவித்திருந்தார்.

குறைந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்தும் பயனாளர்கள் மிக இலகுவாக அடையாளம் தெரியாதவர்களின் கைகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதெனவும், இதனால் Two Factor Authentication என்ற வசதியை பயன்படுத்துமாறும் அல்லது Google Authenticator என்றதனை பயன்படுத்துமாறு இலங்கை சமூகவலைத்தள பயனாளர்களுக்கு குறித்த சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ஷக்கள் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ள சீனா

wpengine

என்னிடம் உள்ள துரும்புச் சீட்டை பயன்படுத்த வைக்காது, என்னை சீண்டுவதனை சம்பந்தப்பட்டோர் நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு நல்லது..- மைத்திரி…

wpengine

விமலின் ‘சிகரெட்’ சட்டவிரோதமானதாம்

wpengine