உள்நாட்டு செய்திகள்

அரசியல் தீர்மானத்தில் திஸ்ஸ அத்தநாயக்க



அரசியல் எதிர்கலம் பற்றி வெகுவிரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை பிழையாக வழி நடத்துகின்றன.

இரண்டு கட்சிகளினதும் இந்நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலிருந்தே இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் செயற்படத் தீர்மானித்துள்ளேன். தேசிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயார்.

வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு மக்களின் தூற்றுதல்களிலிருந்து தப்பிக்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

wpengine

பூஜித் ஜயசுந்தரவினது அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

wpengine