உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அறிக்கை…



மேலைத்தேய நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமையவே அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை அரசாங்கம் துரிதப்படுத்துகின்றது என்று முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பு சபையின் ஆறு உபக்குழுக்களின் அறிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டமை, நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான அலுவலகங்களின் அறிக்கைகள் வெளியாக்கப்பட்டமை என்பன, ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த நிபந்தனைகளாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் அமுலாக்கவுள்ள புதிய சட்டமும், அவ்வாறான நிபந்தனைகளில் ஒன்று. இவ்வாறான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி அரசாங்கம் ஒற்றையாட்சிக்கு முடிவு கட்ட முனைவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

wpengine

மண்மேடு சரிந்து வீழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine