உள்நாட்டு செய்திகள்

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு



அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக ஆணைக் குழுவின் சிரேஷ்ட ஆலோசகரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அரசியலில் செயற்பாடுகளில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைவாகக் காணப்படுவதாக அவர்  இங்கு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியின் செயலாளர், பொறுப்பான அமைச்சுக்கள், தேர்தல்கள் செயலகம், நிறுவனங்கள் என்பவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

Related posts

3வது டெஸ்ட், வெற்றி – தோல்வியின்றி 2-0 என்ற நிலையில் ஆட்டம் நிறைவுக்கு

wpengine

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

wpengine

ஹோட்டல் தீ விபத்திலிருந்து மகேந்திர சிங் தோனி உயிப்பிளைத்தார்….

wpengine

1 comment

fasnas Jun 19, 2015 at 11:49 am

நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுகிண்றது

Comments are closed.