உள்நாட்டு செய்திகள்

அரசின் வரி அறவிடப்படும் செயற்பாடுகள் தனியார்வசம்..?


அரசின் வரி அறவிடும் செயற்பாடுகளை தனியார் வசம் வழங்க தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நிதிக் கொள்கையின் பிரகாரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பொறுப்புகளில் ஒன்றான வரி அறவிடும் செயற்பாடு தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதற்காக குறித்த நிறுவனத்திற்கு வருடாந்தம் 200 கோடி ரூபா கமிஷனாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இறைவரித் திணைக்கள ஊழியர் சங்கம் மேலும் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நிதியமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை எவ்விதப் பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

அதே நேரம் கடந்த 29ம் திகதி இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவிருந்த கலந்துரையாடலும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இறைவரித் திணைக்கள ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

Related posts

கணக்காய்வு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

wpengine

பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு

wpengine

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine