உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசின் பொருளாதாரக் குழு அவசரமாக கூடவுள்ளது


அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு அவசரமாக இன்று கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை உள்ளிட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயும் நோக்கில் பொருளாதாரக் குழு,  மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரையும் அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்

wpengine

“என் வாழ்க்கையில் சந்தித்த மிக பெரிய தோல்வி தென்னாபிரிக்காவிடம் தோற்றதே..” – மேத்யூஸ்…

wpengine

2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் நேரலையில்..

wpengine